Tamil translation of 'Freedom From The Known'
அறிந்ததினின்றும் விடுதலை
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளின் ஒரு தொகுப்பு இந்த நூலில் உள்ளது. ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அவர் ஆற்றிய நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளிலிருந்து வாசகங்கள் தொகுத்து எடுக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.