Tamil translation of 'The Revolution from Within'
உள்மனப் புரட்சி
இந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்கும் ஏற்புடையதாகவுள்ளது. இதற்குக் காரணம், மனித இயல்பு பற்றியும், சமூகம் பற்றியும், தனிநபர் பிரச்சனைகளைப் பற்றியும் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தெளிந்த புரிதலிலிருந்து பிறந்தவைகளாக இவை இருப்பதேயாகும். பிரச்சனைகளுக்கான அவருடைய பதில்கள், காலவரம்பிற்குட்படாத தீர்க்கதரிசனத்தில் வேரூன்றி இருப்பதால், அவை எக்காலத்திற்கும் பொருத்தமானவைகளாக உள்ளன.