Tamil translation of Krishnamurti for the Beginners
ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகளுக்கான சிறந்த அறிமுகமாக, அவருடைய நூல்கள், ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிப்பேழைகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நிகராக, போதனைகளுக்கு விளக்கம் அளிப்பவர்களும், மதிப்பீட்டாளர்களும் எழுதியவை இருப்பதில்லை. இந்தக் கண்ணோட்டத்திலேயே, கிருஷ்ணமூர்த்தி போதனை களை அறிமுகப்படுத்தும்வண்ணம், அவருடைய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கடிதங்கள், நினைவு குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றை தொகுத்து, இந்த அறிமுக நூலை வெளியிட்டுள்ளோம்.